- Advertisement -
“ஒரே நாடு ஒரே இனம்” என கோஷம் எழுப்பியவாறு யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணி ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பேரணியின் நிறைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர பங்கேற்று யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக வைத்து விளக்கேற்றிவைத்தார்.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமான பேரணி கோட்டையை சுற்றி ஏ-9 வீதிச் சந்தியில் ஊடாக கே.கே.எஸ் வீதியில் பயணித்து சத்திரச்சந்தியால் வைத்தியசாலை வீதியால் பயணித்து மகாத்மா காந்தி வீதியுடாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தை வந்தடைந்தது.
- Advertisement -