மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல்மாகாண பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கான தீர்மானம் ரத்து

- Advertisement -

மேல் மாகாணத்தின் உள்ள அனைத்து  பாடசாலைகளையும், எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கான தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி,  கல்விப் பொதுத்தராதர சாதாணதர பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னரே குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக   கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 492 பாடசாலைகளில்,  412 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென நேற்று அறிவிக்கப்பட்டது.

அத்துடன்,  கொழும்பு மாவட்டத்தில் உள்ள 80 பாடசாலைகளை   குறித்த தினத்தில் மீள திறக்க முடியாது எனவும்  குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

மண் சரிவு அபாயம் – விசேட எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் 09 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன்படி, இந்த எச்சரிக்கை நாளை மாலை 6.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட...

Developed by: SEOGlitz