மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாணவர்களை  விளையாட்டுத் துறையில்  பங்கேற்பதற்கு பாடசாலைகளில் இருந்து ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர்

- Advertisement -

பாடசாலைகளில் இருந்து மாணவர்களை  விளையாட்டுத் துறையில்  பங்கேற்பதற்கு ஊக்குவிக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஆணைமடு கண்ணங்கர வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

- Advertisement -

அத்துடன், மாணவர்கள்  வெறுமனே புத்தகங்களை மாத்திரம் கற்பது  பாரிய அழுத்தமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தற்போதைய மாணவர்கள்  பெறும் அறிவானது கல்விதுறைக்கு மாத்திரமன்றி விளையாட்டு மற்று தொழிற்பயிற்சிக்கும் பயனுள்ளதாக இருக்குமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு  சிறந்த கல்வியினை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனவும்  அவர் குறிப்பிட்டார்.

அத்துடன்,   தொழில் பயிற்சி அதிகாரசபையொன்றை உருவாக்கி அவர்களை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் போதே அவர்களினால் வேலைவாய்ப்பினை  பெற்று கொள்வது  கடினமாக அமையாது எனவும்  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ  சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz