கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், மேல் மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பிரதேசங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யுமெனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய, சப்பிரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளைகளில் பனியுடனான வானிலை நிலவக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இவ்வாறு, இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.