மெய்ப்பொருள் காண்பது அறிவு

துறைமுக விவகாரம் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் இன்று

- Advertisement -

கொழும்பு துறைமுக விவகாரம்    தொடர்பான தீர்மானம் மிக்க கலந்துரையாடல்   பிரதமர்  தலைமையில்  இன்று இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ துறைமுக தொழிற்சங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

- Advertisement -

இதன்படி இன்று முற்பகல்  10 மணிக்கு கொழும்பு விஜேராமவில்  அமைந்துள்ள உள்ள  உத்தியோகப்பூர்வ இல்லத்தில்  பிரதமர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை  கிழக்கு முனையம்   துறைமுக அதிகாரசபையின்  கீழ் செயற்பட வேண்டும் என  பிரதமரினால்  உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்

இது தவிர வேறு எந்த தீர்மானத்திற்கும் தாங்கள் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கொழும்பு துறைமுக பணியாளர்கள் முன்னெடுத்துள்ள சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டம்  இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தொழிற்சங்களினால்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை துறைமுக பணியாளர்கள் முன்னெடுத்துள்ள சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்திற்கு காலி மற்றும் திருகோணமலை துறைமுக   சேவையாளர்கள் ஆதரவு  தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தில்    ஜனாதிபதி மற்றும்  பிரதமர் ஆகியோரின் செயற்பாடுகளில் முரன்படும் தன்மை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz