டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த நடைமுறை காணப்படுகின்றது.
இதற்கமைய, குறித்த நடவடிக்கையின்படி, தரவுகள் பதிவுசெய்யப்பட்ட பின்னர், நோயாளிகளுக்கு ‘சுகாதார சேவை அணுகல் அட்டை’யொன்று வழங்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த அட்டையை, கொண்டுசென்றால் வைத்தியர்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்கு இலகுவானதாக இருக்கும் எனபதனாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி சிகிச்சை பெற வருபவர்கள் குறித்த அட்டையை மாத்திரம் கொண்டுவந்தால் போதுமானதாக இருக்கும்.
நுவரெலியா மாவட்டத்தில் மாகாணசபையால் நிர்வகிக்கப்படும் வைத்தியசாலையொன்று இவ்வாறு டிஜிட்டல் மயப்படுத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என டிக்கோயா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.