மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறைத் தண்டனையை மீள் பரிசீலனை செய்யுமாறு ரஞ்சன் கோரிக்கை

- Advertisement -

தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை மீள் பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.

- Advertisement -

இந்த நிலையிலேயே, அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை மீள் பரிசீலனை செய்யுமாறு, ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை இழக்கப்படுவதாக சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன  அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz