மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தைக் கடந்தது – மேலும் 4 உயிரிழப்புகள் பதிவு

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  73 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 942 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பேலியகொடை கொரோனா கொத்தணியிடன் தொடர்புடைய 939 பேரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூவரும்   இவ்வாறு தொற்றுடன்  அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 567 பேர்  குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 526 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் மேலும் நான்கு உயிரிழப்புகள் நேற்று  பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பு 5 பகுதியைச்  சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 9 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கொட்டாஞ்சேனை பகுதியைச்  சேர்ந்த 70 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்   கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மேலும், கொழும்பு 13 பகுதியைச்  சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், உடதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரும் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 379 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் 7 மணியுடன் மூடப்படும்

சப்ரகமுவ மாகாணத்தில் மாலை 7 மணியுடன் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இதனை அறிவித்துள்ளார். இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தில் மருந்தகளுக்கு மாத்திரம் தொடர்ச்சியாக திறந்து வைப்பதற்கு...

Developed by: SEOGlitz