கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குணமடைந்துவருவதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ள நிலையில் அவரின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சர் கடந்த 10 நாட்களாக சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மூன்று அல்லது நான்கு நாட்களில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
எவ்வாறாயினும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய பின்னர் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.