கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினாலேயே, இந்திய அரசாங்கம் கிழக்கு முனைய விவகாரத்தில் தலையிடுவதாக, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இந்த பூகோள அரசியலை, ரணில் விக்ரமசிங்கவே முழுமையாக கொண்டுவந்தார். ரணில் விக்மரமசிங்க மேற்கொண்ட நடவடிக்கைகளினாலேயே இந்தியாவும் தற்போது இதில் தலையிடுகின்றது. 2015 இற்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடையில் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தற்போது நெருக்கடிகள் ஏற்பட்டன. அவர்களின் நான்கு வருட காலப்பகுதிக்குள் எந்தவித துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் வேறு சில குத்தகைகளை இரத்து செய்துவிட்டு, தற்போது நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.