மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

- Advertisement -

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வு சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இம்முறை காணொளி தொழினுட்பம் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை ஆகியவற்றை ஊக்குவித்தல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கை இந்த அமர்வின் 20 ஆவது விடயமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது அமர்வு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்றது.

இதன்போது நல்லாட்சி காலத்தில் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 மற்றும் 40/1   ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினருக்கு எதிராக, முன்வைக்கப்பட்ட இந்த யோசனை தொடர்பில் நாட்டை நேசிக்கும், இலங்கை மக்கள் எதிர்ப்பை தெரிவித்ததாக அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இவ்வாறான அனர்த்தத்திலிருந்து நாட்டை மீட்பதற்கே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு மக்கள் பெரும்பான்மை வாக்குகளை வழங்கியதாகவும் அவர் கூறியிருந்தார்.

அத்துடன், அரசியலமைப்புக்கு முரணான இந்த பிரேரணையில் இருந்து இலங்கை விலகிக் கொள்வதாகவும் அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இன்று ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது, இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தை முன்வைக்க விரும்புவதாக, பல்வேறு நாடுகள் தெரிவித்திருந்தன.

பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மலாவி, வடக்கு மெசிடோனியா மற்றும் Montenegro ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை உள்ளடக்கிய அமைதிக்கான தமது உறுப்பாட்டை தாம் வெளிப்படுத்துவதாக, குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாகவும், நாட்டின் இறையாண்மையை எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் கேள்விக்கு உட்படுத்தெ முடியாது எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தியலும நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 9 வயதுடைய சிறுவன் பலி..!

மாகந்துரை - மாவரெல்லை பகுதியைச்சேர்ந்த 9 வயதுடைய சிறுவன் ஒருவன் தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கொஸ்லாந்தை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த சிறுவனின சடலத்தை குறித்த...

க.பொ.த சாதரண தர பரீட்சை தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்த முக்கிய அறிவித்தல்..!

கல்விப்பொதுத்தராதர சாதராண தர பரீட்சை நடவடிக்கைகளின் போது அனைத்து    சிசுசெரிய பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. சுகாதார வழிகாட்டுதலகளுக்கமைய சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்குவது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்...

ரோஹிங்யா அகதிகளை மீட்பதற்கு முன்வருமாறு ஐ.நா சபை அழைப்பு..!

இந்து சமுத்திரத்தில் சிக்கியுள்ள ரோஹிங்யா அகதிகளை மீட்பதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டில்...

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்று இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை...

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 3000க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி...

Developed by: SEOGlitz