உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த அறிக்கை ஜனாதிபதி செயலகத்தின் நீதித் துறை பணிப்பாளர் சந்திரகுப்த ரோஹணதீரவினால் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த அறிக்கை தற்போது நாடாளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன், குறித்த அறிக்கையின் பிரதிகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.