ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி தனது முதலிடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நிறைவு பெற்றுள்ள நிலையில், புதிய புள்ளிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அவுஸ்திரேலிய அணி 332 புள்ளிகளுடன் 73 தசம் 8 வீத வெற்றியுடன், முதலிடத்தில் உள்ளது.
அத்துடன், இந்திய அணி 400 புள்ளிகளுடன், 70 தசம் 2 வீத வெற்றியுடன், இரண்டாம் இடத்தில் காணப்படுகிறது.
மேலும், நியூஸிலாந்து அணி 3ஆவது இடத்திலும், இங்கிலாந்து 4 ஆவது இடத்திலும், தென்னாபிரிக்கா 5ஆவது இடத்திலும் காணப்படுகிறது.
அத்துடன், 6 ஆவது இடத்தில் பாகிஸ்தான் அணியும் 7 ஆவது இடத்தில் இலங்கை அணியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.