சினிமா துறைசார்ந்தவர்களுக்கு விசேட வரிச்சலுகைகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தாலும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால், இது இல்லாது செய்யப்பட்டிருந்தது.
அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துடையாடலில் இதற்கான அனுமதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, திரைப்படங்களை தயாரிப்பவர்கள் மற்றும் காட்சிப்படுத்துபவர்கள், அதற்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்யும்போது, அதற்கான இறக்குமதி வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
அத்துடன், சினிமா துறையை மேலும் வளர்ச்சியடைய செய்ய அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.