இந்தோனேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தேடும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Sriwijaya Air விமான நிறுவனத்துக்கு சொந்தமான குறித்த விமானம் கடந்த 9 ஆம் திகதி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்த 62 பேரினதும் உடல்களை தேடும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், விமானிகளின் தொடர்பாடல் குரல் பதிவு பெட்டியையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விமானத்தின் தரவுகளை பதிவு செய்யும் கருப்புப் பெட்டி, இந்த வார முற்பகுதியில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,