மெய்ப்பொருள் காண்பது அறிவு

வௌவாலில் இருந்து பரவும் புதிய வகை வைரஸ் : இலங்கைக்கும் அச்சம்?

- Advertisement -

புதிய வகை வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள நிபா எனப்படும் புதிய வைரஸ் தொற்றுக் குறித்தும் சுகாதார அமைச்சு விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இருப்பினும், புதிய வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பரிந்துரையும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ​​நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை சுகாதார அமைச்சு கண்காணித்து வருவதாகவும் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நிபா வைரஸ் வௌவாலில் இருந்து பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் அதன் பாதிப்பு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிபா வைரஸ் மனிதர்களிலும் பிற விலங்குகளிலும் தொற்று மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன், அதிக இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிகெட் தொடரின் போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றலா மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று இருபதுக்கு இருபது மற்றும்...

Pfizer கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்த அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவில் Pfizer கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு அவுஸ்திரேலிய மருத்துவ சபை இன்று அனுமதியளித்துள்ளது. இதன்படி பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பதிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தடுத்துவைக்க்பட்டுள்ள  குற்றப்பலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் வீடியோ தொழிநுற்பம் ஊடாக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. உயிர்த்த...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் சிலர் நாடுதிரும்பினர்

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 195 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேரத்தில் குறித்த இலங்கையர்கள் நாடு  திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதன்படி சிங்கப்பூரில் இருந்து...

இளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய  Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo,...

Developed by: SEOGlitz