மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி போராட்டம்!

- Advertisement -

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நூறு வீத உரிமையினை இலங்கை துறைமுக அதிகாரசபை வசம் பெற்றுக் கொள்ளும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.

கிழக்கு முனையம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின முழு உரிமையினையும் இலங்கை அரசாங்கத்தின் வசம் பெற்றுக் கொள்ளும் வரை தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் இலங்கைக்கு மிக முக்கியமான துறைமுகத்தின் 49 வீதமான உரிமையினை இந்தியாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க முற்படுவது நியாயமற்றது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே டி லால்காந்த தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக நிலைமை முன்னெடுக்கப்பட்டால் முழு நாட்டையும் வௌிநாடுகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நிலைமை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பசறையில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

பசறை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். ஹொப்டன் மற்றும் கமேவெல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை...

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா…!

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க...

கைவிடப்பட்ட நுவரெலிய போராட்டம்….!

நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தில்,  நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதற்கு, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம்...

சொகுசு பேருந்து செயற்றிட்டம் வெற்றி : இலங்கை போக்குவரத்து சபை!

Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டம் பாரிய வெற்றியை பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டத்தின்...

நாடாளுமன்ற அமர்வுகளுக்கு கட்டுப்பாடு : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த...

Developed by: SEOGlitz