புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் பணிபுரியும் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றின் சாரதி ஒருவருக்கு, கடந்த 12 ஆம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, குறித்த சாரதியுடன் தொடர்புடைய ஏனைய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களுக்கு வீடுகளில் சுயதனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய நிலையில், வீடு செல்வது பாதுகாப்பற்ற விடயமாகும் எனவும், இதனால் தமக்கு உரிய வசதிகளை செய்து தருமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போது அவர்கள் தற்காலிக இடமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.