மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெல்ஜியத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

பெல்ஜியத்தின் Brussels நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Brussels நகரில்  பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையிலேயே, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, கார்கள் மற்றும் பல்வேறு உடைமைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதோடு, கல்வீச்சுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்துள்ளதோடு, பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில், 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த இளைஞர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தும், இதற்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் பொது மக்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாளைய தினத்திற்குள் கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கும் சாத்தியம் – சுகாதார அமைச்சு

நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்ததும், அதனை உடனடியாக வழங்குவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்க – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி!

தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. பாகிஸ்தான் - கராச்சியில் இடம்பெறும் இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இதன்படி, தமது...

நாளை முதல் FACEBOOK வழங்கவுள்ள புதிய வசதி – இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையில் சுமார் 6 தசம் 5 மில்லியன் FACEBOOK பயனாளர்கள் காணப்படுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல்...

நாட்டின் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 369 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 709...

பிட்டபெத்தர பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தொற்றுக்குள்ளான சிலர் அடையாளம்!

மாத்தறை மாவட்டத்தில் - பிட்டபெத்தர பகுதியிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மொரவக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12 முதியோர்களுக்கும், முதியோர் இல்லத்தில்...

Developed by: SEOGlitz