மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு!

- Advertisement -

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட அலங்கார வளைவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்- கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில், குறித்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதி ஒதுக்கீட்டிலும் இவ் அலங்கார வளைவு
சம்பிரதாய, பண்பாட்டு சின்னங்களைத் தாங்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

அலங்கார வளைவின் கட்டுமாணப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்றிரவு விசேட யாக பூஜைகள் இடம்பெற்றன.

தைத்திருநாளான இன்றையதினம், நல்லூர் ஆலயத்திலிருந்து, திறப்பு விழாவுக்குத் தேவையான பொருட்கள் பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிலில், செம்மணி அலங்கார வளைவு அமைந்துள்ள இடத்திற்கு எடுத்துவரப்பட்டன.

தவில் நாதஸ்வரம் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களைப் பாராயணம் செய்ய, இறையாசியுடன் அலங்கார வளைவுத் திறப்பு விழா இடம்பெற்றது.

சிவாச்சாரியர்கள், சைவசமயப் பெரியவர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள், அதிகாரிகள், நல்லூர் கந்தசுவாமி ஆலய பரிபாலகர்கள் எனப் பலரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு! 1 நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு! 2 நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு! 3 நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு! 4 நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு! 5 நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு! 6

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பசறையில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

பசறை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். ஹொப்டன் மற்றும் கமேவெல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை...

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா…!

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க...

கைவிடப்பட்ட நுவரெலிய போராட்டம்….!

நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தில்,  நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதற்கு, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம்...

சொகுசு பேருந்து செயற்றிட்டம் வெற்றி : இலங்கை போக்குவரத்து சபை!

Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டம் பாரிய வெற்றியை பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டத்தின்...

நாடாளுமன்ற அமர்வுகளுக்கு கட்டுப்பாடு : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த...

Developed by: SEOGlitz