நாடாளுமன்றில் ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவின் அலுவலகம் நேற்று முழுமையாக மூடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் மேலதிக செயலாளர்களுள் ஒருவரும் ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவின் செயலாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆளுந்தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை காரியலயமும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக நேற்று மாலை நடத்தப்படவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் அத்தியவசிய தேவைகளின்றி வேறு எவரையும் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் அனுமதிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற படைக்கால சேவிதர் தெரிவித்தார்.