கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைவடைந்திருந்த நிலையில் , நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன்படி, கொழும்பில் 223 தொற்றாளர்கள் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ளனர்
இதற்கமைய, கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், கொழும்பு மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 387 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில், தெமட்டகொடையில் 30 பேருக்கும், கொழும்பு மாநகரசபை ஊழியர்கள் 32 பேருக்கும் நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், புதுக்கடையைச் சேர்ந்த 16 பேர், புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 223 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் நேற்றையதினம் 119 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 580 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 32 பேருக்கும், களனிய பகுதியைச் சேர்ந்த 16 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் மேலும் பல பகுதிகளிலும் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், களுத்தறை மாவட்டத்தில் நேற்றையதினம் 112 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்காயிரத்தைக் கடந்துள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட அம்பாறை மாவட்டத்தில் 13 பேரும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா 08 பேர் வீதமும் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், கிழக்கு மாகாணத்தில் இதுவரை ஆயிரத்து 390 பேர் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 16 பேரும், நுவரெலிய மாவட்டத்தில் 07 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 34 பேரும் நேற்றைய தினம் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கண்டி, காலி, குருநாகல், கேகாலை, அனுராதபுரம், இரத்தினபுரி, மாத்தறை, புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் நேற்றையதினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டில் நேற்றையதினம் 692 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.