மெய்ப்பொருள் காண்பது அறிவு

முகக் கவசம் அணியாது கைது செய்யப்பட்டவர்களில் 48 பேருக்கு கொரோனா தொற்று!

- Advertisement -

மேல் மாகாணத்தில் முகக் கவசங்களை அணியாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்களில், இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

முகக் கவசங்களை அணியாத நபர்களை, கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை, கடந்த ஐந்தாம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

- Advertisement -

இதன்படி, முகக் கவசங்களை அணியாது செயற்பட்ட 121 பேர், நேற்றைய தினம் PCR மற்றும் RAPID ANTINGEN பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்தார்.

இந்த நிலையில், கடந்த ஐந்தாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், மேல் மாகாணத்தில் இரண்டாயிரத்து 513 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, அவர்களில் 48 பேருக்கு, இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்ட 28 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், இரண்டாயிரத்து 490  பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பிலிருந்து வெளியிடங்களுக்கு பயணிக்கும், பேருந்து பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பின்  வெள்ளவத்தை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பயணிக்கும் பேருந்துப் பயணிகளுக்கு நேற்று மாலை RAPID ANTIGEN பரசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 103 பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, மேல் மாகாணத்தின் வார சந்தைகளில், நேற்றைய தின் 184 பேருக்கு  RAPID ANTIGEN பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கும் செல்லும் நபர்களை, RAPID ANTIGEN பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை நேற்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதன்படி, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில், நேற்றைய தினம் 504 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

அத்துடன், பாடசாலை போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் 36 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்களில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் அதிகரிக்கும் அச்சநிலை – 873 பேருக்கு கொரோனா – உயிரிழப்பும் அதிகரிப்பு…!

நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும்,...

நுவரெலியா மாவட்டத்தில் 16 பாடசாலைகளுக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து!

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தமிழ்ப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர்...

இந்தியாவிலிருந்து தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்!

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த கொள்வனவு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியான அனுமதியைப்...

தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – அதிகரிக்கும் தொற்றாளர்கள்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது. பேலியக்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 330 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு தொற்றுடன்...

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சியினால் கோரிக்கை

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்தநாட்டு எதிர்க்கட்சித் தலைவர் தத்துக் அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம்...

Developed by: SEOGlitz