நாட்டின் பல்வேறு பகுதிகளில், நேற்று ஏற்பட்ட ஏழு வாகன விபத்துக்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் நான்கு பேர் வீதியில் பயணித்த நபர்கள் எனவும், ஒருவர் நடைபாதையில் பயணித்தவர் எனவும், ஏனைய இருவர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், நேற்றைய தினம் 32 பேர் வாகன விபத்துக்களில் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும், வீதிகளில் நடைபயணங்களை மேற்கொள்ளும் போதும் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவுகின்ற நிலையில், சாரதிகள் அவமானமாக செயற்படுமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.