இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரிஸ்பேனில் இடம்பெறவுள்ள இறுதி டெஸ்ட்டில் பும்ரா விளையாட மாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்தும் பும்ரா விளையாடினால் அவது காயம் பெரிதாகும் என்பதால் , அடுத்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பும்ராவிற்கு மாற்றாக, ஷர்துல் தாகூர் அல்லது நடராஜன் அணியில் விளையாடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்களான ஷமி, உமேஷ் யாதவ், ராகுல் மற்றும் ஜடேஜா உள்ளிட்டோர் தொடர்ந்து காயமடைந்து போட்டியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.