மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவரும் திருநாளாக இத்தினம் அமையட்டும் : ஜனாதிபதி வாழ்த்து!

- Advertisement -

இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவரும் திருநாளாக இத்தினம் அமையட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தனது வாழ்த்துச் செய்தியில், உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும்.

- Advertisement -

இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது.

இந்து சமயத்தின்படி வாழும் தமிழ் மக்கள் தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன்.

விளைச்சலின் மூலம் கிடைக்கும் புத்தரிசியை பாலுடன் சேர்த்து பொங்க வைத்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், முழு உலகிற்கும் சுபீட்சம் கிட்ட வேண்டும் என்று அவர்கள் பிரார்த்திக்கின்றனர்.

இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவது என்னுடையவும் எமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும். இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான வழிவகைகள் எமது அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நன்றியுணர்வு என்பது இலங்கை சமூகத்தின் ஒரு தனித்துவமான பண்பாகும். அறுவடையின் முதல் பகுதியை சூரியனுக்கு படைக்கும் தைப்பொங்கல் பண்டிகை, பழங்காலத்திலிருந்தே நம் சமூகம் மதித்து வரும் விழுமியங்களை குறிக்கிறது.

இதன் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை தேசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

மனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

போதைப் பொருள் பாவனைக்கு வறுமையே காரணம் – துரித நடவடிக்கை என்கிறார் அங்கஜன்!

நல்லூர் பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் அவசியமான ரயில் கடவைகளை அடையாளப்படுத்தி அதனை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறைகளை உருவாக்கி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச செயலகருக்கும், ரயில்வே திணைக்கள...

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 379 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டம் - பண்டாரகமை பிரதேச செயலாளர் பிரிவுக்கு...

சாய் பல்லவியுடன் இணையப்போகும் அந்த நகைச்சுவை நடிகர் யார்? விபரம் உள்ளே…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, அடுத்ததாக காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் வெளியான "பிரேமம்" என்ற படம்...

ஓஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ள சூரரைப் போற்று…?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இதன்படி, சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஏர் டெக்கான்...

Developed by: SEOGlitz