மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேஸ்புக் – வட்ஸ்ஆப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை!

- Advertisement -

உகாண்டாவில் பேஸ்புக் – வட்ஸ்ஆப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், குறித்த சமூக ஊடகங்களைத் தடை செய்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில், இணையத்தள சேவை வழங்குபவர்களுக்கு அந்நாட்டு தகவல் தொடர்பு ஒழுங்குபடுத்தும் அமைச்சு மறு அறிவித்தல்வரை பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள், வட்ஸ்ஆப் உள்ளிட்ட மெசேஜிங் செயலிகள் அனைத்தையும் தடை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தடுக்கும் முகமாக குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டினது ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

*****

கெப்பிட்டல் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்: https://t.me/capitalnewslk

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாடசாலைகளில் முறையான சுகாதார பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு

பெப்ரவரி மாதம்  மேல் மாகாணத்தின் அனைத்து  பாடசாலைகளும்  மீளதிறக்கப்படுவதற்கு முன்பதாக  கடுமையான சுகாதார பாதுகாப்பு திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள...

நாட்டின் பல பகுதிகளிலும் 18 பேர் கைது -காரணம் இதோ!

மேல்மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில்  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட  மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை...

பசறையில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று

பசறை பிரதேசத்தில்  பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி  கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளங் காணப்பட்டனர். இதனையடுத்து குறித்த இரு மாணவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி...

கண் வைத்தியசாலையில் 6  பேருக்கு கொரோனா தொற்று

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின்  பணியாளர்கள் 6  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாதியர்கள் இருவர், அலுவலக பணியாளர்கள் இருவர், பாதுகாப்பு அதிகாரி  மற்றும் வைத்தியசாலை சமையலறையின் உணவு தயாரிப்பாளர் என 6 பேர்...

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட 103 நிறுவனங்கள்!

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட  மேலும் 103  நிறுவனங்கள்  அடையாளங் காணப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில்  அரச மற்றும் தனியார் துறையினை  உள்ளடக்கியவகையில்  910 நிறுவனங்களில்  நேற்று  மேற்கொள்ளப்பட்ட  விசேட சோதனை நடவடிக்கையில்...

Developed by: SEOGlitz