யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அகற்றப்பட்டமையை கண்டித்து யாழ்.மாநகர சபையில் மூன்று கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
யாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றையதினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, நினைவுத்தூபி அகற்றப்பட்டமையை கண்டித்து சபை அமர்வை ஐந்து நிமிடங்கள் ஒத்திவைத்தல், மாநகரசபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத்தூபியை அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.