நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான PCR பரிசோதனை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே நாளை மறுதினம் நாடாளுமன்றில் PCR பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.