மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாடகை நிறுவனங்களிடமிருந்து வாகனங்கள் திருட்டு : இருவர் கைது!

- Advertisement -

வாடகை நிறுவனங்களிடமிருந்து திருடப்பட்ட 17 வாகனங்களை முல்லேரியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வாகன திருடப்படுவது தொடர்பாக தமக்குக் கிடைத்த முறைப்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து பதினாறு கார்கள் மற்றும் ஒரு வான் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

மேலும் குறித்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பல் திருடிய வாகனங்களைப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லேரியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வாகனங்களை வாடகைக்கு எடுத்த பின்னர் தமது வாகனத்தை இழந்தவர்களை முல்லேரியா பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வாடகை நிறுவனங்களிடமிருந்து வாகனங்கள் திருட்டு : இருவர் கைது! 1 வாடகை நிறுவனங்களிடமிருந்து வாகனங்கள் திருட்டு : இருவர் கைது! 2 வாடகை நிறுவனங்களிடமிருந்து வாகனங்கள் திருட்டு : இருவர் கைது! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் அதிகரிக்கும் அச்சநிலை – 873 பேருக்கு கொரோனா – உயிரிழப்பும் அதிகரிப்பு…!

நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும்,...

நுவரெலியா மாவட்டத்தில் 16 பாடசாலைகளுக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து!

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தமிழ்ப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர்...

இந்தியாவிலிருந்து தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்!

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த கொள்வனவு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியான அனுமதியைப்...

தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – அதிகரிக்கும் தொற்றாளர்கள்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது. பேலியக்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 330 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு தொற்றுடன்...

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சியினால் கோரிக்கை

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்தநாட்டு எதிர்க்கட்சித் தலைவர் தத்துக் அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம்...

Developed by: SEOGlitz