மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை!

- Advertisement -

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சிசிர டி அப்ரு, விஜித் மலல்கொட மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபரினால் தொடப்பட்டுள்ள குறித்த வழக்கில், ரஞ்சன் ராமநாயக்க குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, நீதியரசர் சிசிர டி அப்ரு சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த நிலையிலேயே, மூன்று பேர் அடங்கிய குறித்த நீதியரசர்கள் குழாமினால், நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்தொன்றை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, ஓய்வுபெற்ற சிரேஷ்ட விமானப் படை அதிகாரி சுனில் பெரேராவினால், உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது

இந்தப் பின்னணயில், குறித்த முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு, ரஞ்சன் ராமநாயக்கவை பிரதிவாதியாக குறிப்பிட்டு, சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையிலேயே, குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேல்மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் சாத்தியம்? : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

மேல்  மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்று மாணவர்களுக்காக 907 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்ப்ட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சரான தாரக பாலசூரியவின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் கொரோனா  தொற்றுக்குள்ளான நபர்...

ஸ்பெயினில் பாரிய வெடிப்புச் சம்பவம் : இருவர் உயிரிழப்பு!

ஸ்பெயினின் மாட்றிட் நகரில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எரிவாயு கசிவால் ஏற்பட்ட குறித்த வெடிப்புச் சம்பவத்தால் பல கட்டடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த வெடிப்புச் சம்பவத்தினையடுத்து...

நெடுந்தீவில் விபத்திற்குள்ளான இந்திய மீனவர்கள் சடலமாக மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரால் இன்று மாலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார்...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு : ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 389 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 187 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 53 வயதான...

Developed by: SEOGlitz