மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா முடக்கப்படுமா? : அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்..

- Advertisement -

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப்பரவல் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்  சமன் பந்துலசேன தலைமையில் விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு பிரதேச செயலர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், சுகாதாரத்துறையினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் காவற்துறையினர் எனச் சகல தரப்பினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

வவுனியா நகருக்குள் பிரவேசிக்கும் பிரவேசிக்கும் பகுதிகளான நெளுக்குளம் சந்தி , தாண்டிக்குளம் சந்தி ,மாமடுவ சந்தி ,பூந்தோட்டம் சந்தி
கண்டி வீதி இராணுவ முகாம் சந்தி ஆகிய இடங்களில் பாதுகாப்பு பிரிவினர் மூலம் போக்குவரத்து கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் செல்வற்கு அனுமதி மறுக்கப்படுவதுடன் அரச உத்தியோகத்தர்கள் அடையாள அட்டையினை பாதுகாப்பு பிரிவினருக்கு அடையாளப்படுத்தி கடமைகளுக்கு செல்ல முடியும் எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரிலிருந்து நெளுக்குளம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து தாண்டிக்குளம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து வன்னி இராணுவ முகாம் வரையும் , வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து மாமடுவ சந்தி வரையிலுமான பகுதிகள் முடக்கப்படுகின்றது.

மேலும், மக்கள் வெளிச்செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டு மக்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தனிமைப்படுப்படும் பகுதிகளுடாக நகருக்குள் பிரவேசிக்கும் தனியார் , இ.போ.ச பேரூந்துகள் நகரின் எப்பகுதியிலும் தரித்து நிற்பதற்கு தடை விதிக்கப்படுவதுடன் வைத்தியசாலைக்கு அருகேயுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் மாத்திரம் பேரூந்துகளை நிறுத்த முடியும் எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முடக்கப்படும் பகுதிகளில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையினையும் அமுல்படுத்தவுள்ளதாகவும் குறித்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றையதினம் ஒரே நாளில் 51 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்படவேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் 27 பேருக்கும், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் 24 பேருக்கும் என வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 51பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வவுனியா மாவட்டத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்கவும், சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தை முடக்குவது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா முடக்கப்படுமா? : அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்.. 1 வவுனியா முடக்கப்படுமா? : அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்.. 2 வவுனியா முடக்கப்படுமா? : அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்.. 3 வவுனியா முடக்கப்படுமா? : அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்.. 4

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 27 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்...

வவுனியாவில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

வவுனியா பட்டானிச்சூர் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து சுகாதார பிரிவினரினால்...

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று விசேட கூட்டம்!

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19 ஆம்...

இந்திய – அவுஸ்திரேலிய டெஸ்ட் : நான்காம் நாள் ஆட்டம்..

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர்...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny கைது!

ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny, கடந்த ஆண்டு விஷத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை...

Developed by: SEOGlitz