மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர்!

- Advertisement -

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 414 பேர், நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்தே, அவர்கள் வருகை தந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபி நகரிலிருந்து 186 இலங்கையர்கள் இன்று காலை 5.45 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன், கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக, 225 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.15 அளவில் நாட்டை வந்தடைந்ததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சொகுசு பேருந்து செயற்றிட்டம் வெற்றி : இலங்கை போக்குவரத்து சபை!

Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டம் பாரிய வெற்றியை பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டத்தின்...

நாடாளுமன்ற அமர்வுகளுக்கு கட்டுப்பாடு : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த...

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 20  மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். நாட்டில் நேற்றைய நாளில் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகத்துவாரம் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு விலை மனு...

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் நபர்களிடம்  ரப்பிட் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கும் நடவடிக்கை இன்று முதல் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்...

Developed by: SEOGlitz