கொரோனா தொற்றினது உருவாக்கம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தின் விசேட நிபுணர் குழு சீனா செல்லவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா ரைவரஸ் உருவான விதம் குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து உலக சுகாதார நிறுவனம், குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்திருந்தது.
எனினும் சீனா குறித்த விசாரணை நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வந்த நிலையில், நேற்றையதினம் சீனாவின் சுகாதார அமைச்சு அனுமதியளித்திருந்தது.
இதனடிப்படையில் குறித்த நிபுணர் குழு எதிர்வரும் 14 ஆம் திகதி சீனா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.