மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கை!

- Advertisement -

மேல் மாகாணத்தில் முகக் கவசங்களை அணியாது செயற்பட்ட 121 பேர், நேற்றையதினம் PCR மற்றும் RAPID ANTINGEN பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

முகக் கவசங்களை அணியாத நபர்களை கொவிட் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை, கடந்த ஐந்தாம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், கடந்த ஐந்தாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இரண்டாயிரத்து 334 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

இதற்கமைய, அவர்களில் ஆயிரத்து 313 பேர் RAPID ANTIGEN பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், 19 பேர் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆயிரத்து 21 பேர் இதுவரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 27 பேர் இதுவரை தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேல் மாகாணத்தில் முகக் கவசங்களை அணியாது செயற்பட்ட நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், இதுவரை 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி...

கன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு!

மேஷம் - இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக...

வெள்ளவத்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு…

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்றைய தினம் மூன்று  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில். தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை –...

நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 410 ஆக...

எதிர்க்கட்சியை விமர்சனத்திற்கு உட்படுத்திய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்தும் சிறந்தது என நினைக்கும் கட்சியாகவே எதிர்க்கட்சி காணப்படுவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப பியும் பஸ்குவல் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

Developed by: SEOGlitz