வட மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 55 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவிக்கின்றார்.
இதன்படி, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 51 பேரும், முல்லைதீவு மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும்,யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருமே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளனர்
யாழ் மருத்துவ பீட ஆய்வுகூடம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் என்பற்றில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் 19 பரிசோதனைகளின் அடிப்படையிலேயே, குறித்த தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் கொரோனா தொற்று நிலைமை கருத்து கெப்பிடல் செய்திப்பிரவுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
இதேவேளை, திருகோணமலை கிண்ணியாவிலுள்ள மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு பகுதிக்கு நேற்று மாலை முதல் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பிரதேச மக்களுக்குஅன்டிஜென் மற்றும் பிசிஆர் சோதனைகளை நடத்த மூன்று குழுக்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.