நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 283 புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி,நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 766 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தோரின மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 6 ஆயிரத்து 57 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரை 232 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், களவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மட்டக்களப்பில் இதுவரை 381 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 249 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், மட்டக்களப்பில் இதுவரை 14 ஆயிரத்து 62 பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மட்டக்களப்பில் இதுவரை 04 கொரோனா தொற்று உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இதுவரை 599 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் கணிணி உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் நபர்கள் என கண்டறியப்பட்டுள்ளது
அத்துடன், சீதுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதிதாக 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சீதுவ பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் நால்வர் கேகாலை – பின்னவெல வைத்தியசாலையிலும், ஏனைய நபர் திவுலப்பிட்டிய வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், லியனகேமுல்ல பகுதியில் 70 பேர் தங்கியிருந்த விடுதிகள் இரண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சீதுவ பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.