இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இந்த போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்போது, 407 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 334 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில், Rishabh Pant 97 ஓட்டங்களையும், Cheteshwar Pujara 77 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 338 ஓட்டங்களையும், இந்திய அணி 244 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.
இதனையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, ஆறு விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இதன் அடிப்படையில், இந்த இரு அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 க்கு 1 சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.