வடமேல் மாகாணத்தில் காணப்பட்ட PCR ஆய்வுகூட தேவை நிவர்த்தி செய்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குருநாகலை பொது வைத்தியசாலையில் குறித்த PCR ஆய்வுகூடம் பிரதமரினால் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 125 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த ஆய்வு கூடத்துக்காக, குருணாகலை நகர சபையின் மூலம், 54 இலட்சம் ரூபா பெறுமதியான PCR இயந்திரம் ஒன்றும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த PCR இயந்திரத்தின் மூலம் நாளாந்தம் 700 PCR பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.