மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவின் தடுப்பூசி விரைவில் இலங்கையில்? : தூதுக்குழுவுடன் விசேட சந்திப்பு..

- Advertisement -

சீனாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள Sinovac Biotech நிறுவனத்தின் தூதுக்குழுவினர் மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், Sinovac தடுப்பூசியின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசியை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள் ஆகியன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

சீன வர்த்தக அமைச்சு மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் வைத்தியர் பாலித டி.பி கொஹொன ஆகியோர் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, PowerChina நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் He Bing மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் வைத்தியர் பாலித டி.பி கொஹொன ஆகியோருக்கிடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் குறித்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தடுப்பூசி விரைவில் இலங்கையில்? : தூதுக்குழுவுடன் விசேட சந்திப்பு.. 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பூநகரி பிரதேசத்தில் யுவதி வெட்டிப் படுகொலை : கணவர் கைது!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பூநகரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பூநகரி தெளிகரை பகுதியில் அமைந்துள்ள அவரது...

1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி ஹட்டனில் பாரிய போராட்டம்…!

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு தயார் இல்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவிக்கின்றார். எனினும்,  கூட்டு ஒப்பந்தத்தத்தின் ஊடாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க முடியாத பட்சத்தில்,...

இலங்கை Vs இங்கிலாந்து : முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மதிய...

நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கம்…!

மினுவங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை தடுப்புதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுமா…?

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்தில் முதற்கட்ட தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, Oxford-AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாகவே ஆரம்பக்கட்ட ஆய்வுகள் முன்னெடுக்கபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி...

Developed by: SEOGlitz