மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம்!

- Advertisement -

நேற்றைய நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தில் 217 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, பொரளையில் 69 பேரும், மட்டக்குளியவில் 22 பேரும், அவிசாவளையில் 21 பேரும், தெமட்டகொடையில் 18 பேரும், நாரஹேன்பிட்டியில் 16 பேரும், கொம்பனி வீதியில் 10 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மாவட்ட ரீதியாக, இரத்தினபுரியில் 40 பேரும், காலியில் 26 பேரும், கண்டியில் 13 பேரும், ஹம்பாந்தோட்டையில் 10 பேரும், மட்டக்களப்பில் 9 பேரும், களுத்துறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 8 பேரும், கொரோளா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், மொனறாகலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, பதுளை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, நேற்றைய நாளில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில், நாட்டில் 44 ஆயிரத்து 618 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 19 ஆயிரத்து 980 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 10 ஆயிரத்து 215 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 744 பேரும், கண்டி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 208 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விபத்துக்குள்ளான இந்திய இழுவை படகில் பயணித்தவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் விபத்துக்குள்ளான இந்திய இழுவை படகில் பயணித்தவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் படகு மீது மோதி விபத்துக்குள்ளான இந்திய இழுவை படகு ஒன்று கடலில் மூழ்கியது. இந்த சம்பவம் நேற்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி...

கன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு!

மேஷம் - இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக...

வெள்ளவத்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு…

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்றைய தினம் மூன்று  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில். தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை –...

நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 410 ஆக...

Developed by: SEOGlitz