மெய்ப்பொருள் காண்பது அறிவு

ட்ரம்ப்  மீது புதிய குற்றச்சாட்டு : ஜனநாயகக் கட்சி அறிவிப்பு!

- Advertisement -

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  மீது  ஜனநாயகக் கட்சி சார்பாக இன்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது.

வன்முறையினை ஏற்படுத்தியமை உட்பட  பதவி  விலகவேண்டும் என கோரியும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளதாக  அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் Nancy Pelosi  தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதனிடைய டொனால்ட் டர்புக்கு எதிரான  குற்றப்பத்திரிக்கையில்  நாளைய தினம் அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களிக்க முடியும் என   அமெரிக்க ஜனநாயகக்ட்சி தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித்  தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றதை  உறுதிப்படுத்தும் நிகழ்வு வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில்  கடந்தவாரம் இடம்பெற்றது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் போராட்டத்தில் ஈடுப்பட்டதன்  காரணமாக ,  மோதல் நிலை ஏற்பட்டதில் ஐவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  வொஷிங்டன் நாடாளுமன்ற கட்டடட தொகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமது ஆதரவாளர்கள் தேசபக்தர்கள் என   டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன்காரணமாக டொனால்ட் ட்ரம்பின்  உத்தியோகப்பூர்வ  டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக  முடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

போதைப் பொருள் பாவனைக்கு வறுமையே காரணம் – துரித நடவடிக்கை என்கிறார் அங்கஜன்!

நல்லூர் பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் அவசியமான ரயில் கடவைகளை அடையாளப்படுத்தி அதனை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறைகளை உருவாக்கி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச செயலகருக்கும், ரயில்வே திணைக்கள...

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 379 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டம் - பண்டாரகமை பிரதேச செயலாளர் பிரிவுக்கு...

சாய் பல்லவியுடன் இணையப்போகும் அந்த நகைச்சுவை நடிகர் யார்? விபரம் உள்ளே…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, அடுத்ததாக காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் வெளியான "பிரேமம்" என்ற படம்...

ஓஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ள சூரரைப் போற்று…?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இதன்படி, சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஏர் டெக்கான்...

Developed by: SEOGlitz