ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அரசியல் கட்சிகளையும் ஒரே அரசியல் இயக்கமாக ஒன்றிணைக்க தான் உறுதி பூண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இடம்பெறும் அனைத்து தேர்தல்களையும் வெற்றி கொள்ள இரு கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரு கட்சிகளையும் ஒன்றிணைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை யுக்ரேன் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை நாட்டில் மற்றொரு கொரோனா கொத்தணி உருவாவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.