உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபரின் கைகளிலேயே தங்கியுள்ளதாவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே சட்டமா அதிபரின் நடவடிக்கைகளும் தாமதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி கிடைக்கபெறும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் இதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.