நாட்டின் ஜனநாயக வரலாற்றில் அமைக்கப்பட்ட மிகப் பலவீனமான அரசாங்கம் இதுவாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் கொரோனா பரவல் தொடர்பில் எதிர்க்கட்சி தனது நிலைப்பாட்டை பலமுறை அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தன்னிச்சையான நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான எந்தவொரு நடைமுறை சாத்தியமான திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.