வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளது.
தவிர்க்கமுடியாத காரணங்களினால் கடந்த நான்காம் திகதி முதல் நேற்று வரை வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவுக்காவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உட்பட தூதரக பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.