அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் இன்று முதல் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான இதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளலர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த காலங்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்கள் மாத்திரமே சேவைக்கு உள்வாங்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் தற்போது, அனைத்து நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சுகாதார வழிமுறைகளின் கீழ், அனைத்து ஊழியர்களையும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரச பணியாளர்களில் கர்ப்பிணி தாய்மார்கள் வாரத்திற்கு 3 நாட்கள் மாத்திரமே சேவைக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.