மெய்ப்பொருள் காண்பது அறிவு

குருநாகலை பொது வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை : பிரதமர் மஹிந்த!

- Advertisement -

குருநாகலையில் அமைந்துள்ள மாகாண பொது வைத்தியசாலையை அதி நவீன வைத்தியசாலையாக நிர்மாணிக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.

குருநாகல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் புதிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை குருநாகல் பொது வைத்தியசாலையில் காணப்படும் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துரைத்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, குருநாகல் பொது வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர், தாதியர் மற்றும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை ஒரு மாதத்திற்குள் நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.

அத்துடன் போதனா வைத்தியசாலையாக இருந்த போதிலும் மாகாண வைத்தியசாலையாகவே குறித்த வைத்தியசாலை செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் இதன்போது பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் மூன்றாவது பெரிய வைத்தியசாலையாக குருநாகல் பொது வைத்தியசாலை காணப்படுவதாக பிரதமர் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் குருநாகல் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளதன் காரணமாக ஏனைய மாவட்டங்களில் இருந்தும் குருநாகல் மாகாண பொது வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக மக்கள் வருகை தருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.

இதன் காரணமாக தற்போது காணப்படும் வைத்தியசாலையை புணரமைப்பதை விட குருநாகல் நகரத்திற்கு பொருத்தமான புதிய வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிப்பதே பொருத்தமானது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ  சுட்டிக்காட்டினார்.

இதன்படி குருநாகலையில் அதிநவீன வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டை இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வவுனியாவில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

வவுனியா பட்டானிச்சூர் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து சுகாதார பிரிவினரினால்...

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று விசேட கூட்டம்!

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19 ஆம்...

இந்திய – அவுஸ்திரேலிய டெஸ்ட் : நான்காம் நாள் ஆட்டம்..

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர்...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny கைது!

ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny, கடந்த ஆண்டு விஷத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை...

இரத்தினபுரி வைத்தியசாலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள்  இருவர் உட்பட  நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நிர்வாக பிரிவினரிடம் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக  சுகாதார...

Developed by: SEOGlitz