மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

- Advertisement -

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் எழுந்தமானமாக  மேற்கொள்ளப்பட்ட  பீ.சி.ஆர்.பரிசோதனையில் 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியான பீ.சி.ஆர்.பரிசோதனை அறிக்கையில் குறித்த நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“கடந்த புதன்கிழமை  மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் மக்களிடம் எழுந்தமானமாக பீ.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பீ.சி.ஆர்.பரிசோதனையின் அறிக்கைகள் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியாகி உள்ளன.

200 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் 2 நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக புத்தளம் அரச போக்குவரத்து சேவையில் கடமையாற்றும் நடத்துனர் ஒருவருக்கும், மன்னார் அரச பேரூந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடாத்தி வரும் காத்தான் குடியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பு உள்ள முதல் நிலை தொடர்பாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

போதைப் பொருள் பாவனைக்கு வறுமையே காரணம் – துரித நடவடிக்கை என்கிறார் அங்கஜன்!

நல்லூர் பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் அவசியமான ரயில் கடவைகளை அடையாளப்படுத்தி அதனை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறைகளை உருவாக்கி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச செயலகருக்கும், ரயில்வே திணைக்கள...

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 379 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டம் - பண்டாரகமை பிரதேச செயலாளர் பிரிவுக்கு...

சாய் பல்லவியுடன் இணையப்போகும் அந்த நகைச்சுவை நடிகர் யார்? விபரம் உள்ளே…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, அடுத்ததாக காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் வெளியான "பிரேமம்" என்ற படம்...

ஓஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ள சூரரைப் போற்று…?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இதன்படி, சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஏர் டெக்கான்...

Developed by: SEOGlitz