மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்ட் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேரும்,களவாஞ்சிக்குடி மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்டவர்களுள் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனவும் மட்டக்களப்பில் இதுவரை 380 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 247 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதுவரை 13,687 பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன்ட் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் மேலும் தெரிவித்துள்ளார்.